Thursday, January 26, 2012

இஸ்லாமிய பெண்களின் முகத்திரைகள்

இப் பதிவு இஸ்லாமிய பெண்கள் ஏன் முகத்திரை அணிய வேண்டும் அல்லது ஏன் அணியக்கூடாது என்பது பற்றி அல்ல. அல்லது அவர்களின் முகத்திரை பற்றிய என் பார்வையும் அல்ல.

இஸ்லாமிய பெண்களின் முகத்திரைகள்

பொதுவாக மலேசியாவில் தலையை மட்டும் முடியவாறு தான் பெண்களைக் காணலாம். இத்தனைக்கும் மலேசியா முழுமையான இஸ்லாமிய நாடு. முகத்திரை அணிந்த இஸ்லாமிய பெண்களை நான் காணவே இல்லை எனலாம். ”அக்கா” என்றழைக்க எல்லோருமே பண்பாய் பழகுவார்கள். அக்கா, மலாய் மொழியில் சகோதரி என்று மட்டுமல்லாது பொதுவாக பெண்களைக்கும் சொல் - தோழி என்று வைத்துக் கொள்ளலாம்.


மாலைதீவின் விமான நிலையத்தில் கவனித்தேன், அட்டகாசமான முகப்பூச்சுகளில் ஜொலித்துக் கொண்டிருந்தார் ஒரு விமானப் பணிப்பெண். அவர் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த அடையாள அட்டையிலும் அதேபோல 'மின்னலடிக்கும்' படம் இருந்தது. ஆனால் அட்டையின் மறுபக்கம் முகத்திரையுடனான அவர் படமொன்று இருந்தது. மாலைதீவும் இஸ்லாமிய நாடு தான்.

அண்மையில் அவுஸ்திரேலியா சென்ற போது சிட்னி விமான நிலையத்தில் ஒன்றைக் கவனித்தேன். பாதுகாப்பு சோதனைகளின் போது முகத்திரை அணிந்த இஸ்லாமிய பொண்களை தனித்தனியாக அவர்கள், அவர்களின் பாஸ்போட்டில் உள்ளவர்கள் தானா என பரீட்சிக்க - பெண்கள் கழிப்பறைப் பக்கமாக அழைத்துச் சென்றார்கள்.
ஆரம்பத்தில் அவர்கள் இதற்கு இணங்க மறுக்க, பின்பு பல்வேறு மொழிகளில் அச்சடிக்கப்பட்டவை காட்டி, மறுத்தால் வெளியேற முடியாதென விளக்கிச்சொல்லி.. அந்த வெள்ளைகார பெண்களுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.
எனக்கு ஓம் சாந்தி ஓம் இல் வரும் காட்சி ஞாபகம் வர சிரிப்பும் வந்தது.

தாய்லாந்து சுவர்ணபூமி விமான நிலையத்தில் இதற்கென தனியாக மறைப்புகள் கூட அமைக்கப் பட்டுள்ளன.

எனக்கு நிறைய முகத்திரை அணியும், அணியா இஸ்லாமிய நண்பிகள் உண்டு. பல்வேறு நாடுகளில் பயணம் செய்யும் போது நான் அவதானித்தவை அவர்களுக்கு புதினமாக இருந்தது.

No comments:

Post a Comment

இன்னும்