Tuesday, October 23, 2012

என் கண்மணித்தாமரை

மீனா அல்லது ரம்யா கிருஷ்ணன் காதிலிருந்து, மெல்ல நழுவி மெதுவாய் கன்னத்தை உரசியபடி கிழே விழுந்து, இரண்டோ மூன்றோ முறை எகிறிக் குதித்து, விறு விறுவென வாசலை நோக்கி ஓடி வெளியே வந்து, ஒரே பாய்ச்சலாய் விண்ணுக்கு பாய்ந்து, அங்கும் சில-பல குட்டிக் கரணங்கள் அடித்த பின் நட்ட நடுவானில் ஒளி உமிழ்வதெல்லாம் கிறபிக்ஸ் “தோடு“ தான்.

இதற்கிடையில் குளோசப்பில் கண்களாலும் உதடுகளாலும் அம்மன் குறைந்தது மூன்று முறையாவது சிரித்திருப்பார், படத்திலுள்ள பக்தர்களேடு நாமும் பரவசப்படும்படியாக காட்சி முழக்கப்படும். இது 3D இல் வந்தால் இன்னும் விஷேசம்.

ஆனால் நிஜத்தில் அப்படியா இருக்கும்?

அம்மன்

"கிட்டத்தட்ட ஒன்பதாவது பாட்டு முடிகின்ற நேரம் சட்டென ஓர் மின்னல் கீற்று மூலஸ்தானத்திற்குப் பக்கமாய் பளிச்சிட்டதை, அம்மாவின் மடியில் பால் குடித்துக் கொண்டிருந்த அபிநயா, கிழே எரிந்து கொண்டிருந்த நெருப்பு, ஓடி விளையாடிக் கொண்டிருந்த நாய்க்குட்டியையும் சேர்த்து வந்திருந்த எல்லா ஏழை - பணக்காரரும் பார்த்தார்கள், இல்லை உணர்ந்தார்கள் என்பதே சரியாய் இருக்கும்.

என்ன அது என்று சுதாரித்துக் கொள்வதற்குள்; பின் வானில் அத்தனை வெளிச்சம், ஒரு UFO.
இல்லை நிலா,
நிலாவே தான்.

அந்த அடர்ந்த அமாவாசையில் ஓர் பௌர்ணமி நிலா.

அம்மனைப் போய் கிட்டப் பார்த்தால் தோட்டைக் காணோம்"


கிட்டத்தட்ட இப்படித்தான் “என் கண்மணித்தாமரை“ கதையும் முடிகிறது.

என் கண்மணி தாமரை
என் கண்மணி தாமரை

பிறகு ஒரு பின் குறிப்பு - பின் நாட்களில் so-and-so பலராலும் ”அபிராமிப்பட்டர்” என்று அழைக்கப்பட்டார்.

ஆக, கதை சொல்லும் பாங்கால் “என் கண்மணித்தாமரை“ யும் நான் பாலகுமாரனை ரசிப்பதற்கு மேலும் ஒரு காரணமாகிறது.

No comments:

Post a Comment

இன்னும்