Monday, February 7, 2011

Dhobi Ghat - மும்பை நாட்குறிப்புகள்

நடிகா் அமீர்கான் தயாரிப்பில், கிரண் ராஒ (Mrs Amir) இயக்க அமீர்கான் (அருண்), மோனிகா டொக்ரா (சாய்), ப்ரட்டீக் பப்பர் (முன்னா), கீர்த்தி மல்கோத்ரா (யாஸ்மின்) முக்கிய வேடங்களில் நடிக்கும் படம் DHOBI GHAT (அது சலவைத் தொழில் செய்யும் இடத்தைக் குறிக்கும் என்று நினைக்கின்றேன்)

மும்பையில் வெவ்வேறு துறைகளில் தரங்களில் இயங்கும் நான்கு மனிதா்களில் வாழ்கையைப் பேசுகிறது படம்.


ஆரம்பத்தில் யாஸ்மின், அமீர், முன்னா, சாய் என சுற்றிவரும் Camera, போகபோக மும்பை வீதிகளின் சன நெருக்கடியில் சிக்கிக் கொள்கிறது. முன்னா வீதியின் குறுக்கே பாய்து ஓடும் போது, நிறுத்தப்படும் காறுக்குள்ளே மாறி தொடா்ந்து carறோடு பணயமாகும் cameraவில் சொல்லிக்கொள்கிற மாதிரி ஆங்காங்கே சில காட்சிகளில் மட்டுமே ரசிக்கக்கூடிதாக உள்ளது. இருந்தாலும்
கறுப்பு வெள்ளை புகைப்படங்களின் செருகல் நன்றாகவே உள்ளது.

உண்மையில் ஓர் இசைக்கலைஞராக இருக்கும் மோனிகா டொக்ரா, சாய் என்ற அமேரிக்காவில் வாழும் இந்தியப்பெண்ணாக வருகிறா். முன்னாவை மேற்சட்டை இல்லாமல் படம் பிடித்து விட்டு அவன் உடலை ரசிக்கும் இடம் தவிர நடிக்கவே இல்லை.

அருண் + சாய் நெருங்கும் காட்சியின் பின்னணிக்கான இசையில் கித்தாரின் ஒலியும் சித்தாரின் ஒலியும் பிணைந்து கொள்வது நன்றாக வந்திருக்கின்றது. அடுத்த நாள் குற்ற உணர்ச்சியுடன் அருண்ணின் தயக்கமும் புதுசு. மற்றப்படி பின்னணி இசையை நரம்பு வாத்தியங்கள் தம்மால் முடிந்த வரை நிரப்பிக் கொள்கின்றனவே தவிர ... டிங் டொங் டிங் தான்.

லிப்ட் காட்சியில் முன்னா ஒப்பரேட்டரிடம் ”நீ என்ன Cameraயே பார்த்ததில்லையா” என எகிறும் போது, சூழலைப் புரிந்து கொண்டு, சாய் தன் மேல் சட்டையை சரிசெய்யும் போதுள்ள இயல்பு, சாய் சிகரட் குடிப்பது போல் காட்டப்படும் போது சுத்தமாக இல்லை. அதைவேறு நாசுக்காக car frame ற்குள் வேறு மறைக்கிறர்களாம்.
அமீா், படம் முழுவதும் மார்பில் ஏதேனும் படம்போட்ட ரி-சேட்டுக்களை அணிந்து கொண்டு வருகிறார், அவரின் ஓவிய மனதின் பிரதிபலிப்பாக அதை தொடர்ந்திருக்கிறார்கள் போல.

முன்னாவை ”ஆண்டி” தன் அறைக்கு வரும் படி துாது அனுப்புவதும், முன்னா அதை மறுப்பது, இதையெல்லா புரிந்து கொண்ட சாய், வெளியே வந்தவுடன் முன்னாவை கிண்டலடிப்பதுவும், ஆண்டிக்களுக்கு கடி.

இறுதியில் வீதியில் செல்லும் வண்டிகளை சட்டை செய்யாமல் முன்னா ஓடுவதும், அவனை கணக்கிடாமல் வீதி இயங்குவதும் நன்கு திட்டமிடப்பட்ட காட்சி.

அந்த மூன்று Video Cassette களுக்குள் ஏங்கிக்கிடக்கும் தனிமையும் வெறுமையும் உண்மையானதும் பிரச்சனையானதும் தான். யாஸ்மினின் முடிவு முன்னமே ஊகிக்கக்கூடியதாக இருந்தாலும், ”இதுதான் எனது கடைசி  letter” என்று சொன்னவுடன் எங்கேயோ திக் என்கிறது. யாஸ்மினின் கண்கள் அமீர் வரைந்ததாக காட்டப்படும் ஓவியத்திலும் உயிரோடுதான் இருக்கின்றன.


அதிகம் வசன இலக்கணங்குள் சிக்கிக் கொள்ளாமல் காட்சி நிரைகளுக்குள்ளேயே பயணிக்கிறது Dhobi Ghat, மெதுமெதுவாய், பெரிதாய் ஒன்றும் இல்லை.

Links : http://www.dhobighatfilm.com/

Photo courtesy of Facebook & IMDB

2 comments:

இன்னும்