Monday, May 7, 2012

பறகா




பிறேசில் பழங்குடி சிறுமி ஒருத்தி இலைகளை விலக்கிக் கொண்டு செடி கொடிகளினுடே எட்டிப் பார்க்கிறாள். இப்படியான அட்டைப் படத்தோடு தான் முதன்முதலில் நான் பறகாவை கவனித்தேன். இது ஓர் தென்னமெரிக்க காட்டுவாசிகளின் கதையாக இருக்கக் கூடும் என எண்ணியவாறு படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.

யப்பானில் குரங்குகள் குளிர்ந்த நீரில் குளித்துக் கொண்டிருக்கின்றன. சீன சனநெரிசல்களில் அதிவேக ரயில்கள் சிக்கித் தவிக்கின்றன. நியுயோர்க் பாதை விளக்குகள் மின்னிக் கொண்டிருக்க, மக்காவின் கோபுரங்கள் வெளிச்சக்கீற்று தாக்கி அழகொழுகிக் கொண்டிருந்தன.



ரஷ்சியாலோ வண்டிகள் நிற்காமலும் செல்லாமலும் இயங்கிக் கொண்டிருந்தன. ஈரானில் பெண்ணொருத்தி தன் முகத்தை மூடிக் கொண்டிருந்தாள், வேறோர் ஊரில் சிறுகுழந்தை தன்னைத் தானே தேடிக் கொண்டிருந்தது.
இப்படி ஒன்றுக்கொன்று உடன்படாதிருந்தபோதும் காட்சிகளின் தொகுப்பாய் உலகை விபரித்தது பறகா.

கதை விவரணம் தாண்டி மொழிகளுக்கு அப்பாற்பட்ட காட்சிகளின் கோர்க்கப்பட்ட ஒளிக்கலவை தான் பறக்கா.

உண்மையில் இத்தனை காட்சிகளுக்கும் ஓர் தொடர்பு இருக்கிறது. அதை படம் பார்க்கும் போது நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.
பறக்காவை விமர்சிக்கவோ எழுதி விடவோ எனக்கு முடியவில்லை. நான் முயலவுமில்லை.

பறகா



டைரக்டர் Ron Fricke இன் எல்லா படங்களுமே இப்படிப்பட்டவை தான். அதேபோலவே புதிய படம் சம்ரசாவும் அமைகிறது.

கிட்டத்தட்ட 30 நாடுகளில் 13 மாதங்களில் எடுக்கப்பட்ட படம் பறக்கா. ஆனால் சம்ரசா 5 வருடக் கனவு, முயற்சி.

காத்திருக்கிறேன்.

Spirit of baraka

baraka samsara

1 comment:

  1. This dance belongs to Sufi community of the Islam. They will go round and round, non stop and they never fall down. it is connected to spiritualism.

    ReplyDelete

இன்னும்