Monday, March 4, 2019

வீரமணி ஐயர்


அப்பாவுக்கு அவர் மேல் மிகுந்த மரியாதை இருந்தது. அவரின் சொல், இசை ஆளுமை பற்றி பலமுறை அப்பா சொல்லி இருக்கிறார். அப்போதெல்லாம் அவர் யார் என்று எனக்குத் தொியாது.

அது 80களின் இறுதியாக இருக்க வேண்டும், என் சங்கீத ஆசிரியையின் வற்புறுத்தலின் பேரில் “பாரதி கான சபா” சென்றிருந்தேன். இவா் வரக்கூடும்.

ஆண்டு விழா. சபா மண்டபம் நிறைய ஆட்கள். நடுவில் சரஸ்வதி, கொஞ்சம் இடம், பிறகு முரளியும் நானும்.

இவர் வரும்வரைக்கும் கீர்த்தனைகள் தான். கொஞ்சம் பிந்தித்தான் வந்தார் என்று நினைக்கிறேன். கடகடவென உள்ளே வந்தவர் எனதருகில் உட்கார, எனதும் அவரதும் முழங்கால்கள் முட்டிக் கொண்டன. ஆசுவாசப் படுத்திக்கொண்டோம். அசீவாதமாக கூட இருக்கலாம்.

சபாவிற்காக பாடல் இயற்றக் கேட்டுக் கொண்டார்கள். அங்கு ஆரம்பித்தது வித்தை. சரஸ்வதி நாக்கில் இருந்தால் எப்படி இருக்கும் என்று நேராகப் பார்த்தேன். அப்படி ஒரு பிரவாகம் - சொல்லிலும் சரி மெட்டிலும் சரி. ஒன்றுக்கு நான்கு கீர்த்தனைகளை கொட்டினார். பக்கத்திலிருந்த சபாக்காறர் எழுத திணறினார்.

வேலை முடிந்தது வாழ்த்தினர் வணக்க்கினர் விடைபெற்றார்.

கலை சிலருக்கு வரம், அச்சிலர் சமூகத்தின் வரம்.

குக்கூ வின் இந்த இசை ஆவணத்தை headphone இல் இறுதிவரை கேட்கவும்.. it will transport you.


Wednesday, May 29, 2013

மறு பிறப்பு - Left Bank


நிர்வாணம், முழங்காலில் வேறு காயம், நடப்பதே கஷ்டம், யாரோ துரத்திக் கொண்டிருப்பது போல ஓடிக்கொண்டிருக்கிறாள் அவள். இருட்டு - இரத்தம் - கறுப்பு நிற திரவங்கள். ஓடி ஓடி தளர்ன்றும்  தவறி விழக்கூடாது என முனைந்தும் கருங்குழிக்குள் விழுந்து விடுகிறாள். பின் எந்த தடயமும் இன்றி அவள் புதைந்து போகிறாள்.

சட்டென சுதாரித்துக் கொண்டது போல கமெரா(1) சுற்றும் முற்றும் தேடுகிறது. காணவில்லை, யாரையும் காணவில்லை. காட்சி இருண்டு மறைகிறது.

மெல்லிய வெளிச்சம். ஒரு நீர்த் தேக்கம். மூச்சு திணற தலையை துாக்குகிறாள் அவள். நன்கு சுவாசித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறாள். மெல்ல நகர்ந்து கரை சேர்கிறாள். தன்னை ஒரு முறை பார்க்கிறாள். நிர்வாணம், ஆனால் முழங்காலில் காயம் இல்லை.

சுற்றும் பார்க்கிறாள். அது ஒரு குகை. அங்கிருந்து மூன்று வழி இருப்பது போல தெரிகிறது. ஒன்றில் மெல்லிய வெளிச்சம் வருகிறது. அத்திசையில் நடக்கிறாள். ஒரே நீரோட்டங்கள். செற்ப துாரத்தில், தவழ்ந்து - ஊர்ந்து செல்லுமளவிற்குத்தான் இடம் இருக்கிறது. மெல்ல முயன்று தலையை முன்செலுத்த..
--
குழந்தையின் தலை வெளியே வந்து விட்டது. தாதி பிரசவிக்கும் பெண்ணை ஊக்குவிக்கிறார். குழந்தையும் முழுமையாக பிறக்கிறது. தாயும் தந்தையும் தம் பெண் குழந்தையைப் பார்த்து பூரிப்படைகிறார்கள்.

Movie Left Bank

அந்த கமெரா(1) உயிரா? விதியா?

Wednesday, February 20, 2013

விஸ்வரூபம் கார் விபத்து


விஸ்வரூபம் திரைப்படம் பற்றிய சார்பான/முரணான மத/அரசியல் கரணங்கள் தவிர்த்து கதை சொல்லும் முறைமை பற்றிய பார்வை ஒன்று.

பூஜா குமார் + கமல் கடத்தப்பட்டு கட்டி வைக்கப்பட்டு இருக்கும் கட்டட உச்சியில் ஓர் ஒழுக்கு இருக்கும்.

Friday, December 7, 2012

பொய்க்கால்

பள்ளிக்கூடத்தில் பம்பலாக பார்த்தவை தவிர்த்து, நான் முதன் முதலில் பார்த்த மேடை நாடகம் அதுதான். முகத்திலடிக்கும் உண்மையையும் அடக்கமுடியாதபடி சிரிப்பையும், திரு மருகையன் அவர்கள் எழுதி திரு சிதம்பரநாதன் அவர்கள் இயக்கிய அந்த நாடகம் தந்தது.

ஊர் பெரியவரான பொய்க்கால் தாத்தா, அவர் அணிந்திருக்கும் உயரமான பொய்க்கால், சின்னராசு, சின்னராசை லவ் பண்ணும் பெண், கூடத்திரியிற பெடியள் எண்டு ஒவ்வொரு பாத்திரத்திலும் உயிர். கண்ணன் மாஸ்டரிண்ட இசையில் பாட்டுகளுக்கு அவை ஆடின ஆட்டமும் அட்டகாசம். அந்த நாட்களின் குண்டு வீச்சுக்களுக்குள்ளயும், அட இப்பிடி ஒர் உலகம் இருக்கு எனக்கு புரிய வைத்ததும், என்னை மிகவும் பாதித்த முதல் மேடை நாடகமும் "பொய்க்கால்" தான்.

பொய்க்கால் தாத்தாவின் அறிமுகமே தனி, சின்னராசுவின் நளினங்களில் நாங்கள் லயித்திருக்கும் போது குமாரசாமி மண்டபத்தில் பார்வையாளர்களின் பின்னால் இருந்து வந்து நாடகத்துள் நுழைந்து கொண்டார். ”என்ன சின்னராசு, பாட்டெல்லாம் பாடுறியாம், ஆட்டங்கள் போடுறியாம்” என்றவுடன் டான்ஸ் எல்லாம் நிண்டுபோச்சு. இதுதான் கதையின் பொய்க்கால் எண்டு - எல்லாம் விளங்கின மாதிரி - வழமை போல - நானும் நினைத்தேன். ஆனால் அதுவல்ல கரு. வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தில் உள்ளுரில் விலாசம் காட்டுபவர்களின் கால்தான் - பொய்க்காலின் கரு.

இதற்குள் சின்னராசு + நண்பர்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிவப்புத் துணியை காப்பாற்ற அதை இழுக்கிறார்கள். இறுதியில் நண்பர்கள் விட்டு விட்டு போக, சின்னராசு தனித்து நிற்கிறான் - இழுக்கிறான். புரிய வேண்டியவர்கள் சிவப்புத் துணியை புரிந்து கொள்ளுங்கள்.

ஊரின் உண்மைகளை அட்டகாசமான திரைக்கதையோடு இருக்கிற வளங்களை வைத்துக் கொண்டு நடித்துக் காட்டினார்கள் - நடந்து காட்டினார்கள் பொய்க்காலில்.

இன்னும்