Monday, November 22, 2010

Red Cliff - சிவப்புச் செங்குத்துப் பாறை

சிவப்புச் செங்குத்துப் பாறை - Red Cliff


ஒற்றுமை

அது எதுவாகவேனும் இருக்கட்டும், இல்லாத ஓன்றின் மீதான ஏக்கமும் அது இருந்தால் எப்படி இருக்கும் என்ற நினைப்பும் நம்மிடம் இயல்பாகவே இருக்கும்.
வேறொருவருக்கு அது இருந்து, அதன்மூலம் வெற்றி கொள்ளும் போது நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியின் அளவிலேயே அது நம்மிடம் இல்லையே என்ற வருத்தமும் இருக்கும்.

Wednesday, October 20, 2010

ஆதி - கோடி கோடியாய், முடிவில்லாமல்

எனக்கு அதை சொல்லத் தெரியவில்லை.

மல்லிகை, முல்லை, அல்லி …. என வெவ்வேறு பூக்களாய்ப் பூத்ததாக தெரியவில்லை. அத்தனையும் தாமரையாய் இருந்தன.

பூத்தன பூத்தன புவனம் பதின்நான்கயும் தாண்டிப் பூத்தன. முதலில் ஆயிரம் கோடி பூத்தன, பின்னர் கோடியின் கோடியாய் பூத்தன. முடிவில்லாமல் பூத்தன, முடிவிலியிலும் பூத்தன.


Tuesday, October 5, 2010

மன்மதன் அம்பு


வா
எடு
தொடு
விடு

அம்பை அல்ல
அன்பை, அன்பம்பை

மார்பைத் துளைக்கட்டும்
சோர்வைக் கலைக்கட்டும்

வீரம் தளைக்கட்டும்
வெற்றி முளைக்கட்டும்

இன்பம் விளையட்டும்
வாழ்வு களை கட்டும்

2004-02-02
2:40 PM

Thursday, September 30, 2010

முத்தம் - என் கன்னத்தில் எச்சில்த்துளி

பவளவாய் இருந்து பற்றறுத்துத் தெறித்த எச்சில்த்துளி என் கன்னத்தில் இன்னமும் ஈரமாய். பச்சையாய் இருக்கிறது என் நினைவுகளில் அந்த முத்தம். அவன் ஸ்பரிசம், குறைந்தது பார்வையாயினும் கிடைக்காதா என ஏங்கும் கோடி கோடி நெஞ்சங்களுக்கு மத்தியில், எனக்கு முத்தமே கிடைத்திருக்கும் பட்சத்தில் - வேறென்ன மொத்தமாய் அடைந்தேன் மோட்ஷம்.

ஆடை உடுத்திருந்தானா? அரைநாணாவது கட்டியிருந்தானா?


இன்னும்