Wednesday, February 20, 2013

விஸ்வரூபம் கார் விபத்து


விஸ்வரூபம் திரைப்படம் பற்றிய சார்பான/முரணான மத/அரசியல் கரணங்கள் தவிர்த்து கதை சொல்லும் முறைமை பற்றிய பார்வை ஒன்று.

பூஜா குமார் + கமல் கடத்தப்பட்டு கட்டி வைக்கப்பட்டு இருக்கும் கட்டட உச்சியில் ஓர் ஒழுக்கு இருக்கும்.



வில்லன்கள் விசாரிக்கிறார்கள்.
ஒரு நீர் துளி விழுகிறது
வில்லன்கள் மீண்டும்  விசாரிக்கிறார்கள்
மேலும் ஒரு நீர் துளி விழுகிறது
வில்லன்கள் விசாரணை தொடர்கிறது...

தொழுகை செய்வதாக பாசாங்கு செய்யும் கமல் சட்டென - கண் இமைக்கும் நேரத்தில் - நீர் துளி விழும் நேரத்தில் - எதிரிகளை தாக்கி நிலைமையை மாற்றிக் கொள்கிறார். அது அத்தனை வேக கணக்கில் நடப்பதாக சித்தரித்திருப்பர்கள்.

பூஜா, சுதாரித்துக் கொண்டு அந்த மாற்றம் - கண் இமைக்கும் நேரத்தில் - நீர் துளி விழும் நேரத்தில் - நடந்ததை உணர்ந்து கொள்வதை மீண்டும் அதே சண்டையை slow motion இல் காட்டுவார்கள்.

பின்னணியில் ”யார் என்று தெரிகிறதா இவன் தீ என்று புரிகிறதா” பாடல் வேறு - அட என்ன கற்பனை - என்ன தொகுப்பு

”ரசிகர்கள்/பார்வையாளர்கள் பார்க்கும் முதல் கட்சி முக்கியம்” என்று கமல் சொன்னது இதை தான் என்று நான் நினைக்கிறேன்.

-----

The Things of Life என்ற பிரான்சு திரை படத்தை ஆங்கிலத்தில் Intersection ஆக எடுத்திருந்தார்கள்.

விபத்து ஒன்று நடக்கும். எதிர்பாராத விதமாக வீதியிலே வரும் லாறி மீது மோதுவதைத் தவிர்க்க நினைக்கும் ரிச்சர்ட் இன் கார் தடம் புரண்டு காற்றில் பறந்து சுழன்று புதர் ஒன்றுள் புகுந்து மிக மோசமாக விபத்துக்குள்ளாகும்.

ரிச்சர்ட் இன் மன உளைச்சல்களுடன் பயணிக்கையில் - லாரியை அவர் கண்டவுடன் பிரேக் பிடிப்பதில் இருந்து slow motion இல் முழு விபத்தையும் கார் இன் உள்ளே இருந்து பார்ப்பது போல காட்டுவார்கள்.

போலீஸ் வந்து விசாரிக்கும் போது லாரி டிரைவர் சொல்வர் "எல்லாம் 2 செகண்ட்டில் நடந்து விட்டது" என்று. உடனே முழு விபத்தையும் 2 செகண்டில் வெளியே இருந்து பார்ப்பது போல காட்டுவார்கள்.

The Things of Life நான் பார்க்க வில்லை, அதிலும் இந்த கார் விபத்து அவ்வாறுதான் கட்சி படுத்தப்பட்டுள்ளாதா என தெரியாது

-----

விஸ்வரூபம் கார் விபத்தை எனக்கு ஞாபக படுத்தியது.

அனால் கூட படம் பார்த்துக்கு கொண்டிருந்தவர் கமலின் அந்த சண்டை காட்சி திரும்ப திரும்ப வருவதாகவும் எடிட்டிங் பிழை என்றும் புலம்பிக் கொண்டிருந்தார்.


3 comments:

இன்னும்