சிவப்புச் செங்குத்துப் பாறை - Red Cliff
ஒற்றுமை
அது எதுவாகவேனும் இருக்கட்டும், இல்லாத ஓன்றின் மீதான ஏக்கமும் அது இருந்தால் எப்படி இருக்கும் என்ற நினைப்பும் நம்மிடம் இயல்பாகவே இருக்கும்.
வேறொருவருக்கு அது இருந்து, அதன்மூலம் வெற்றி கொள்ளும் போது நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியின் அளவிலேயே அது நம்மிடம் இல்லையே என்ற வருத்தமும் இருக்கும்.
இந்தத் திரைப்படத்தை பார்க்கும்போது, நாம் தொலைத்து விட்டிருப்பது – “ஒற்றுமை”.
John Woo
Action படங்களை மிகவும் நேசிப்பவர்களுக்கு டைரக்டர் John Woo வை தெரியாமல் இருக்காது. Face/Off, Mission: Impossible II, Broken Arrow போன்ற அதிரடி படங்களை இயக்கியவர். இவரது Hostage, Windtalkers போன்ற திரைப்படங்கள் மிகவும் பேசப்பட்டன. A Better Tomorrow, Hard Boiled, The Killer ஆகியன Hong Kong சினிமாவில் இவரது பெயரை பதித்தன.
John Woo இயக்கத்தில் வெளிவந்த படமே Red Cliff.
கதைக்கரு
தமிழ் மன்னர்களான சோழன் பாண்டியன் பல்லவன் ராச்சியங்கள் போல, கி.பி. 208-9 களில் சீனாவில் மூன்று ராச்சியங்கள் இருந்தன. மிக பெரிய அரசாட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் கோகோ; அயல்நில மன்னர்களை அடிமைப்படுத்த நினைக்கிறார்.
அதன் பொருட்டு அவரின் தலைமையின் கீழ் மிக பெரிய படையோடு Sun Quan மற்றும் Liu Bei என்கிற இரண்டு நாட்டை கைப்பற்ற முனைகிறார்.
கோகோவின் பெரும் படையை எப்படி மற்றைய அரசர்கள் எதிர்கொள்கிறார்கள், எப்படி எல்லாம் வியுகம் அமைத்து போராடினார்கள் என்பது தான் படம்.
சண்டை காட்சிகள்
படத்தில் இருப்பது இரண்டே இரண்டு சண்டை காட்சிகள்தான். ஒன்று முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் மற்றொன்று இரண்டாம் பாகத்தின் கிளைமாக்ஸ். இரண்டுமே அருமை, சீன படங்களில் வரும் சண்டை காட்சிகள் போலவே இருந்தாலும், அந்த சண்டை தொடங்குவதற்கு முன் அவர்கள் செய்யும் போர் தந்திரங்கள், குறைந்த அளவே உள்ள படைகளை வைத்துகொண்டு எப்படி அவ்வளவு பெரிய படையை அழித்தார்கள் என்று கதையை விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார்கள்.
முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் நிலத்தில் நடக்கிறது, இரண்டாம் பாதி கிளைமாக்ஸ் கடலில் நடக்கிறது.
உருவாக்கம்
மகளிர் படைப்பிரிவுகள், வெற்றியை தம்பக்கம் திருப்புவதற்காக “தற்கொலை” படைப்பிரிவுகளாக மாறும் அணிகள், உளவறிதல் தொடர்பாடல்கள், எதிரியின் பலத்தைக் குறைக்க பயன்படுத்தப்படும் யுக்திகள், காலநிலை மாற்றங்களுக்காக காத்திருத்தலும் அவற்றிற்கு முகம் கொடுப்பதும், எதிரியின் உடல்களுக்கு வழங்கப்படும் மரியாதை, மாண்ட சக வீரர்களுக்கான அஞ்சலி என பல்வேறு தளங்களில் - துறைகளில் திரைக்கதையை கோர்த்திருக்கிறார்கள்.
திரைப்பட பிரம்மாண்டம் என்பது தயாரிப்பு செலவிலல்ல - முக்கியமாக காட்சியமைப்பில் இருக்க வேண்டும் - இதற்கு இத்திரைப்படம் ஒரு உதாரணம். இடம், பொருள், உடை, ஒளிப்பதிவு, நடிப்பு, ஆக்கம், இயக்கம், தொகுப்பு பற்றி சொல்லவே தேவையில்லை - அத்தனை நேர்த்தி
இரு பகுதிகளாக வெளிவந்த இத் திரைப்படம்; பறவை மற்றும் கூர்ம (tortoise) வியுகங்கள் வகுக்கப்படும் போது மகா பாரதத்தை நினையு படுத்தும் அதே நேரம், Takeshi Kaneshiro இன் பாத்திரம் மகாபாரத கிரிஷ்ணனை ஞாபகப்படுத்துகிறது.
ஒரு பெரும் படையை அழிக்க தேவைப்படுவது வீரம் மட்டும் அல்ல ராஜதந்திரமும் ஒற்ருமையும் கூட.
வரலாற்றின் போராட்ட நுட்பங்களை கவனிக்கும் போது, கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.
Trailer is here
Rating : R
http://www.redclifffilm.com/
http://www.facebook.com/redclifffilm
Photo courtesy of Magnolia Pictures
ஒற்றுமை
அது எதுவாகவேனும் இருக்கட்டும், இல்லாத ஓன்றின் மீதான ஏக்கமும் அது இருந்தால் எப்படி இருக்கும் என்ற நினைப்பும் நம்மிடம் இயல்பாகவே இருக்கும்.
வேறொருவருக்கு அது இருந்து, அதன்மூலம் வெற்றி கொள்ளும் போது நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியின் அளவிலேயே அது நம்மிடம் இல்லையே என்ற வருத்தமும் இருக்கும்.
இந்தத் திரைப்படத்தை பார்க்கும்போது, நாம் தொலைத்து விட்டிருப்பது – “ஒற்றுமை”.
John Woo
Action படங்களை மிகவும் நேசிப்பவர்களுக்கு டைரக்டர் John Woo வை தெரியாமல் இருக்காது. Face/Off, Mission: Impossible II, Broken Arrow போன்ற அதிரடி படங்களை இயக்கியவர். இவரது Hostage, Windtalkers போன்ற திரைப்படங்கள் மிகவும் பேசப்பட்டன. A Better Tomorrow, Hard Boiled, The Killer ஆகியன Hong Kong சினிமாவில் இவரது பெயரை பதித்தன.
John Woo இயக்கத்தில் வெளிவந்த படமே Red Cliff.
கதைக்கரு
தமிழ் மன்னர்களான சோழன் பாண்டியன் பல்லவன் ராச்சியங்கள் போல, கி.பி. 208-9 களில் சீனாவில் மூன்று ராச்சியங்கள் இருந்தன. மிக பெரிய அரசாட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் கோகோ; அயல்நில மன்னர்களை அடிமைப்படுத்த நினைக்கிறார்.
அதன் பொருட்டு அவரின் தலைமையின் கீழ் மிக பெரிய படையோடு Sun Quan மற்றும் Liu Bei என்கிற இரண்டு நாட்டை கைப்பற்ற முனைகிறார்.
கோகோவின் பெரும் படையை எப்படி மற்றைய அரசர்கள் எதிர்கொள்கிறார்கள், எப்படி எல்லாம் வியுகம் அமைத்து போராடினார்கள் என்பது தான் படம்.
சண்டை காட்சிகள்
படத்தில் இருப்பது இரண்டே இரண்டு சண்டை காட்சிகள்தான். ஒன்று முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் மற்றொன்று இரண்டாம் பாகத்தின் கிளைமாக்ஸ். இரண்டுமே அருமை, சீன படங்களில் வரும் சண்டை காட்சிகள் போலவே இருந்தாலும், அந்த சண்டை தொடங்குவதற்கு முன் அவர்கள் செய்யும் போர் தந்திரங்கள், குறைந்த அளவே உள்ள படைகளை வைத்துகொண்டு எப்படி அவ்வளவு பெரிய படையை அழித்தார்கள் என்று கதையை விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார்கள்.
முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் நிலத்தில் நடக்கிறது, இரண்டாம் பாதி கிளைமாக்ஸ் கடலில் நடக்கிறது.
உருவாக்கம்
திரைப்பட பிரம்மாண்டம் என்பது தயாரிப்பு செலவிலல்ல - முக்கியமாக காட்சியமைப்பில் இருக்க வேண்டும் - இதற்கு இத்திரைப்படம் ஒரு உதாரணம். இடம், பொருள், உடை, ஒளிப்பதிவு, நடிப்பு, ஆக்கம், இயக்கம், தொகுப்பு பற்றி சொல்லவே தேவையில்லை - அத்தனை நேர்த்தி
இரு பகுதிகளாக வெளிவந்த இத் திரைப்படம்; பறவை மற்றும் கூர்ம (tortoise) வியுகங்கள் வகுக்கப்படும் போது மகா பாரதத்தை நினையு படுத்தும் அதே நேரம், Takeshi Kaneshiro இன் பாத்திரம் மகாபாரத கிரிஷ்ணனை ஞாபகப்படுத்துகிறது.
ஒரு பெரும் படையை அழிக்க தேவைப்படுவது வீரம் மட்டும் அல்ல ராஜதந்திரமும் ஒற்ருமையும் கூட.
வரலாற்றின் போராட்ட நுட்பங்களை கவனிக்கும் போது, கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.
Trailer is here
Rating : R
http://www.redclifffilm.com/
http://www.facebook.com/redclifffilm
Photo courtesy of Magnolia Pictures
நன்று. திரைப்படத்தை பார்க்கத்
ReplyDeleteதூண்டுகிறது