Friday, March 30, 2012

கொலவெறி கொலைக்க்ஷன்




தனுசின்  ‘சூப்’ பாடல் ஒலக பிரசித்தி பெற்றமை எல்லாம் பழைய செய்தி. ஆனால் அதன் பாதிப்பில் உருவான படைப்புகள், வீடியோக்கள் பல அதற்கு நிகராயிருந்தன.  கொலவெறி பாடலுக்கு பதிலாகவும் பல படைப்புகள் வந்திருந்தாலும், சில மட்டுமே சொல்லும் படியாக இருந்தன.
நான் சிலவற்றை இங்கு சேர்த்திருக்கிறேன்.


சுபபந்துவராளி ராகத்தில் பாடப்பட்ட இந்த பாடல் கர்நாடக சங்கீத கொல வெறி. அதற்குள் மகுடியில் புந்நாகவராளியை புகுத்திய விதம் அட்டகாசம். ஆக மொத்தத்தில் பாடல் வரிகள் மட்டும் தான் தனுசினுடையவை மெட்டெல்லாம் இவர்களுடையது. கேட்க

ஸ்டெப் மணி சிங்கப்பூர் வாசி, மேடை நடிகன், அவரின் திறமை + அனுபவம் + நகைச்சுவை கலந்த தொடர்ச்சியான (one shot) இந்த வீடியோ அடக்கமுடியாத சிரிப்பை வர வழைக்கும். eyes-u eyes-u meet இல் வரும் meet க்கு கான உவமானம் இருக்கே... ரசிக்க.

‘நான் இப்படி எல்லாம் செய்வதே இல்லை’ என ஆரம்பிக்கும் இந்த R&B படைப்பு பாடப்படும் போதே காதலைத் தொலைத்து விட்ட தவிப்பைத் தரும், இப்பாடல் வரிகள் தனுசின் கொலவெறி பாடலின் சரியான ஆங்கில மொழியர்ப்பு.

பாப்பா முதல் தாத்தா வரை கவனிக்கப்பட்ட தனுஸ் பாட்டு, என்ன தான் தமிழை கொன்றாலும் சிங்களவரையும் கொல வெறி பாடல் பரவசப்படுத்திற்று. 



தெருவோர ரசிகர்களுக்கு கலகலப்பூட்டிய கொலவேறி நியுசிலாந்தில் தான் முதலில் இடம் பெற்றது. சிட்னியிலும் இது பரவ சிங்கப்பூரும் சிங்கார சென்னையும் விட்டுக் கொடுக்க வில்லை.

Youtube இல் கொலவேறி பெற்ற வரவேற்பிற்கு 3 திரைப்பட குழுவினர் நன்றியும் தெரிவித்திருந்தார்கள். நாளை “3” திரைப்படம் வெளியாகிறது. இந்த பாடலுக்கான காட்சியை எப்படி அமைத்திருப்பார்கள் என்று விரைவில் தெரிந்துவிடும்.

கொலவெறி எதிர்ப்பலை

No comments:

Post a Comment

இன்னும்