Saturday, March 24, 2012

இலங்கையின் உத்தியோகப் பற்றற்ற தூதுவர்கள் அமெரிக்கா வந்துள்ளார்கள்

1930ஆம் ஆண்டு இலங்கையின் வல்வெட்டித்துறையில் இருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டி தமிழர்கள் சென்ற போது, ”இலங்கையின் உத்தியோகப் பற்றற்ற தூதுவர்கள் அமெரிக்கா வந்துள்ளார்கள்” என ‘போஸ்டன் குளோப்’ செய்தி வெளியிட்டிருந்தது.


வ.உ சிதம்பரம்பிள்ளை மட்டுமல்ல வல்வை மக்களும் அமெரிக்காவிற்கு கப்பலோட்டினார்கள். வல்வை சுந்தரமேஸ்திரியார் என்பவரால் நேர்த்தியாக அமைக்கப்பட்ட இரட்டைப் பாய்மரக் கப்பல் கிட்டத்தட்ட 82 ஆண்டுகளுக்கு முன் வல்வையில் இருந்து குளோஸ்ரர் துறைமுகம் வரை சிறப்பாக சென்றடைந்தது.



பசுபிக் சமுத்திரத்தையும் அத்திலாந்திக் சமுத்திரத்தையும் தாண்டி கடற் பயணம் செய்த தமிழர்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவா இதை செய்தார்களா -  இல்லை பரிசோதனை முறையாகத்தான் செய்தார்கள்.

இன்றும் தமிழர்கள் அவுஸ்திரேலியாவிற்கும் கனடாவிற்கும் கூட கப்பல் ஓட்டுகிறார்கள், ஆனால் தேவைகளும், நோக்கங்களும் தான் மாறிவிட்டது.

நன்றி வல்லை புளுஸ் இதழ்.

No comments:

Post a Comment

இன்னும்