Thursday, February 17, 2011

ஓர் கறுப்பு அன்னத்தின் கனவு

நட்டலி போட்மன்


“பாலே” நடனத்தையே கனவாய் நினைவாய் எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் லீனாவை புதிய சுவான் குயினாக தெரிவு செய்து கொண்டு நாட்டிய நாடகத்தை (Version 2.0) அரங்கேற்றுகிறார் தோமஸ் லிறோய் Thomas Leroy (Vincent Cassel). லீனா ஆக நடிக்கிறார் நட்டலி போட்மன்.


திரைப்படத்தில் மூன்று முக்கியமான கேரக்டர்கள்
1) நாயகி - லீனா - நட்டலி போட்மன்
2) வில்லி - பிளைக் சுவான் - நட்டலி போட்மன்
3) துணை கேரக்டர் - வைட் சுவான் - அதுவும் நட்டலி போட்மன் தான், ஆனால் நட்டலி போட்மனுக்கு மூன்று வேடமல்ல, ஒன்றுதான்.


ஹலிவுட்டின் இருக்கும் மிகச்சிறந்த நடிகைகளுக்குள் நட்டலி போட்மனும் ஒருவர். நட்டலி போட்மனின் அழகு, நடனம், நடிப்பு என திரைப்படம் முழுக்க நட்டலி நட்டலி நட்டலி ஆக்கிரமிப்புத்தான்.

“லில்லி” நாட்டிய அரங்கின் கதவைத் திறந்து கொண்டு கதையின் உள்ளே நுழைந்தவுடன் ஆரம்பிக்கின்றது லீனாவின் மன குழப்பம். ஒருவாறாக லீனா தெளிவடையும் போது திரைப்படத்துடன் சேர்ந்து அவளின் வாழ்வும் முடிவடைகிறது.

இடையிடையில் இது “பேய்” படமோ என்று சந்தேகித்தாலும், லீனாவின் மனமாற்றம், உளைச்சல், பயம் தான் இந்த சைக்கோ கதை. திரைப்படத்தில் 95 விகிதமான காட்சிகள் கறுப்பும் வெள்ளையும் நிறைந்த tone தான். பாலே அரங்கு, பின்னரங்கு, பாலே பயிலுமிடம், லீனாவின் அறை என்று இவற்றுக்குள்ளேயே சுற்றுகின்றன கதையும் கமேராவும். முக்கால் வாசி நேரம் நட்டலி போட்மனின் குளேசப் தான், ஆரம்பத்தில் இவை போரடித்தாலும் கதையே அதுதான் எனும் போது சரியாகி விடுகிறது.

ஒரு பக்கம் தோமஸின் பாலியல் ரீதியான அழுத்தம், இன்னெருபக்கம் நாடக பாத்திரமான பிளைக் சுவானின் உயிருடுவல், மற்ரொருபக்கம் ஒரு “வைல்டு” பெண்ணாகுவதில் ஏற்படும் சறுக்கல்கள் மான, மன பிரச்சனை என தத்தளிக்கும் லீனா, எல்லாவற்றையும் தாண்டி சுவான் குயினான பின்னும் ஏன் இறந்து போனாள் ? அதுதான் படம்.

நட்டலி போட்மன் தவிர்த்து

பாலே காட்சிகளில் சோ்ந்து ஓடும் ஆடும் non stabilized கமேரா படத்தின் ஓர் பலம்.
இந்த மாதிரியான படங்களில் இசையின் பங்கை, பாங்கை உணர்ந்து  பயன் படுத்தியுள்ளார்கள்.
பாலே, மேடை, நடனம் தாண்டி குறிப்பாக அந்த லெஸ்பியன் காட்சியில் வரும் பின்னணியிசை - டென்சன் டென்சன் டென்சன்.


Trailer



பிடித்த இரு வசனங்கள்

1. "Perfection is not just about control, its also about let it go"

2. "The only person standing in your way, is you"

குறிப்புகள்


1.
நட்டலி போட்மன் சிறந்த நடிகைக்கான ஆஸ்காருக்கு பரிந்துரைக்கபட்டுள்ளார்
இன்னும் 10 நாட்களில் தெரியும்

2.

இது வயது வந்தவர்களுக்கான படம்

Rated R for strong sexual content, disturbing violent images, language and some drug us

3.

லில்லி - மிலா குனிஸியின் கண்ணழகு (Mila Kunis)

சோவியத் பெண்களுக்கேயான கண்ணழகு

4.

கதையில் தோமஸ் வில்லனல்ல

சொன்னா நம்புங்க

Links:
http://www.imdb.com/title/tt0947798/
http://en.wikipedia.org/wiki/Ballet

Photos:
Balagraphy
IMDB

No comments:

Post a Comment

இன்னும்