Tuesday, June 7, 2011

டிராகன் கொல்லும் டட்டூ பெண்


நாற்பது வருடங்களுக்கு முன்னம் காணாமல் போன, இந்தப் போட்டோவில் உள்ள பெண்ணை தேடுகிறார், ஒரு பிரபு குடும்பத்தை சேர்ந்த தாத்தா. இதற்கென, ஒரு வேலை போன ஒரு பத்திரிகையாளன் நியமிக்கப்பட, முதுகில் டிராகன் டட்டூ உள்ள இளம் பெண் ஒருத்தி தானாகவே அவருடன் இணைந்து கொள்கிறாள்.
இவ்வளவும் தான் டிராகனுக்கும் கதைக்கும் ஆன தொடர்பு.


அந்தப் பெண்ணை தேட தேட, அவள் மட்டுமல்ல இன்னம் அதிகமான பெண்கள் எவ்வாறெல்லம் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப் படுகிறார்கள் என சொல்லும் கதை மாளிகையொன்றின் இருட்டறையில் முடிகிறது. ஆனால் திரைப்படம் அதையும் தாண்டி தொடர்கிறது.


காணமல் போவதற்கு முன் கடைசியாக, அவள் ஓா் ஊா்வலத்தைப் பார்த்துக்  கொண்டு நிற்பது போல, பத்திரிகை ஒன்றில் வந்த ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு, கொலைகாறனைக் கண்டு பிடிக்கும் முறை அருமை.


இக்கதை "Man who hate women" என்னு புத்தகமாக முதலில் வந்து பரிசுகளை வென்றிருக்கிறது.

இந்தப் படத்தின் முக்கிய பலம் கதையும் அந்த டட்டூ பெண் Noomi Rapace யும்தான். The girl who played with fire மற்றும் The girl who kicked the hornet's nest ஆகிய திரைப்படங்கள் கூட இத் திரைப்படத்துடன் தொடர்புடையவை தான்.

ஆனால் ரொம்பவே வல்கரான ஒரு படம். சில காட்சிகளை பார்ப்பதற்கே நிறைய மனவுறுதி வேண்டும். நான் இந்தத் திரைப்படத்தைப் பார்த்ததற்கான ஒரே காரணம் இது, ஆங்கிலமல்லாத சிறந்த படத்திற்கான  BAFTA Awards 2011 பெற்றமைதான்.

இந்த சுவீடன் திரைப்படத்திற்கான Tailer




இதே திரைப்படத்தை இப்போது ஆங்கிலத்தில் ரீமேக்குகிறார்கள். ஆங்கில திரைப்படத்திற்கான Tailer கீழே - இந்த Tailer இன் பின்னணி இசை மெதுவாக ஆரம்பித்து ஒரு உலுப்பத்துடன் முடியும். Stund.




http://www.dragontattoo.com/

புத்தகம் - http://en.wikipedia.org/wiki/The_Girl_with_the_Dragon_Tattoo

Movie Rated - R

No comments:

Post a Comment

இன்னும்