யாரும் யாரையும் வெறுக்கக்கூடாது, நேசிக்கணும், நேசிக்கணும். இதையேதான் United colors of Benetton உம் சொல்கிறார்கள். ஆனால் சொன்ன விதம் தான் கொஞ்சம் சூடாக போய்விட்டது.
வெவ்வேறு சமய, சமுதாய, அரசியல் தலைவர்கள் உதட்டோடு உதட்டாக முத்தமிட்டுக் கொள்கிறர்கள்.
பெனிட்டனின் இப் புதிய விளம்பரம் பாரீசில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவிட, வத்திக்கான் பெனிட்டனை வரிந்து கட்டியிருக்கிறது. நாகரீக உடைகளுக்கென தனியிடம் பிடிக்கும் இத்தாலியக் கம்பனியாகிய பெனிட்டனும் நல்ல பிள்ளையாக (போல) விளம்பரத்தை பின்னிளுத்திருக்கிறது. முக்கியமாக போப்பாண்டவரும் இஸ்லாமியத் தலைவரும் முத்தமிட்டுக் கொள்வதை.
ஆனால் அவர்கள் நினைத்ததை சாதித்தாகி விட்டது, மீடியாக்கள் இவைதான் அந்த சர்ச்சைக்குரிய விளம்பர படங்கள் என வரிசைப் படுத்துகின்றன. பெனிட்டனின் வலைத்தளம் அதிக பயனர்களை எதிர் கொண்டுள்ளது.
- Pope & Al-Tayeb
- Kim Jong-il & Lee Myung-bak
- Obama & Chavez
- Merkel & Sarkozy
- Abbas & Netanyahu
- Hu Jintao & Obama
நீங்களும் யாருக்கேனும் முத்தமிட விரும்பினால் UNHATE எனப் பெயரிடப்பட்ட இவ் விளம்பர முயற்சியில் KISSWALL இல் முத்தங்களை பகிர்ந்து கெள்ள வழி வகுத்திருக்கிறார்கள்.
ஆனால் பெனிட்டனுக்கு இவை புதிதல்ல, ஏற்கனவே பல முறை சர்ச்சைக்குரிய விளம்பரங்களை வெளியிடுவதில் பெயர் பெற்றவர்கள்.
![]() |
Young nun kissing a priest |
முழுதுமாக Photoshop செய்யப்பட்ட இவற்றைப் பார்க்கும் போது புதிதாய் ஒன்று புரிந்தது - அது இந்த இந்த சோடி தலைவர்களுக்கெல்லாம் ஆகாது - என்பது, அதற்குள் அதிபர் ஒபாமா இரு முறை - வாழ்க அமேரிக்கா.
![]() |
Pope & al-Tayeb |
![]() |
Kim Jong-il & Lee Myung-bak |
![]() |
Obama & Chavez |
![]() |
Merkel & Sarkozy |
![]() |
Abbas & Netanyahu |
![]() |
Hu Jintao & Obama |
Benetton